டெக்கான் கிரானிகல், சென்னை:
- பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சிரோன்மனி அகாலி தளக் கட்சி அதிலிருந்து விலகுவதாக அக் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
- பாஜகவில் புதிய நிர்வாகிகள் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். இதுவரை அக்கட்சியின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா பெயர் தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியிலில் இல்லை.
- மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில் மசூதி கட்டப் பட்டுள்ளதை இடிக்கக் கோரி வழக்கு ஒன்றை மதுரா நீதிமன்றத்தில் இந்துக்குழு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
- ஆளுநர் மாநில காவல்துறை அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து நேரடியாக கடிதம் எழுதியதைக் கண்டித்து, தனக்குரிய அதிகார வரம்புக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தாங்கருக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
- குஜராத் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் வழக்குரைஞர் மற்றும் பாம்செப் அமைப்பின் நிர்வாகியுமான தேவ்ஜி மகேஷ்வரி என்பவர் முக நூலில் பார்ப்பன சமூகத்திற்கு எதிராக பதிவிட்டார் என்று காரணம் காட்டி, மும்பையைச் சேர்ந்த ராவல் குஜராத் சென்று மகேஷ்வரியைக் கொலை செய்துள்ளார். அவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென் விமர்சித்துள்ளார்.
- வேளாண் மசோதா, தானியங்களுக்கு குறைந்த பட்ச விலை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று முதலில் சொன்ன மத்திய அர சின் விவசாய அமைச்சர், பின்னர், அரசு குறைந்த பட்ச விலையை உறுதி செய்யும் என்றும் சொல்கிறார். இது எப்படி சாத்தியப்படும்? மக்களை முட்டாள்கள் என அரசு நினைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவை, இந்த ஆண்டு, கரோனா தொற்று காரணமாக, குஜராத் அரசு ரத்து செய்துள்ளது.
தி டெலிகிராப்:
- அரசின் நிர்வாக திறமையின்மையை திசை திருப்பிட சமூகங் களுக்குள் எதிர் எதிர் நிலையை உருவாக்கப்படுகிறது. ஆனால், ஒரு நாகரிகமான சமூகத்தில் எந்த பிரிவினரையும் பலிகடா ஆக்கிட மாட்டார்கள் என வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து:
- இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழுவை மாற்றியமைக்க மத்திய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, மதுரை எம்பி வெங்கடேஷ் மற்றும் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்ப மிட்ட கடிதம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மோடி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
- குடந்தை கருணா
27.9.2020
No comments:
Post a Comment