தண்டிக்கப்பட வேண்டும்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள், ஒரு பெண், ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுதான் அவர்களின் உயிர் இழப்புக்குக் காரணம் (22.8.2020) என்ற அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது!
உ.பி.யில் இதே காரணத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணித்ததுண்டு. உயிர் காக்கும் மருந்துகள் கூட இல்லாமல் இருப்பது மருத்துவமனைக்கு அழகல்ல - இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
அபச்சாரம்! அபச்சாரம்!!
கோயில்களில் பக்தர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
அபச்சாரம், அபச்சாரம்! கோயில்களுக்குள் உள்ள கடவுள்களுக்குச் சக்தியில்லை என்று காட்டுவதற்கான நாத்திக செயல் இது என்று எந்த ஒரு பக்தரும், சங்கராச் சாரியாரும், ஜீயரும், சங்கிகளும் போர்க் கொடி தூக்கவில்லையே ஏன்?
பக்தியின் ஒழுக்கம்?
காற்றில் பறந்த சமூக இடைவெளி! 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் அய்தராபாத் ஏரிகளில் கரைப்பு.
அரசு கட்டுப்பாடுகளைக் காலால் உதைத்துத் தள்ளும் அளவுக்கு பக்தர்கள் கட்டுப்பாடும் - ஒழுக்கமும் மிகுந்த வர்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள் - யார் கண்டது?
சீதாயணம்
இராமாயணத்தை அடுத்து சீதாயணம். இந்தி திரைப்படம் தயாரிப்பு.
சீதை மாமிசம் சாப்பிட்ட காட்சி எல்லாம் இடம் பெறுமா?
No comments:
Post a Comment