கடலூர், செப்.23 விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்.28 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட் டத்தையொட்டி கடலூரில் மாவட்ட அனைத்து கட்சி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட தி. மு. க தலைமை யிலான தோழமை கட்சிகள் கூட்டம் மாவட்ட தி. மு. க செயலாளர் எம். ஆர். கே. பன்னிர் செல்வம் தலைமையில் 22.9.2020அன்று காணொளி காட்சி வழியே நடந்தது. கூட்டத்தின் நோக் கத்தை திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் துரை சந்திரசேகரன் விளக்கி பேசினார்.. த. வா. க. சார்பில் திருமால், காங்கிரஸ் ராதாகிருஷ்ணன், சி பி எம் ஆறுமுகம், சி பி அய் துரை, வி. சி. க சார்பில் அறவாழி, முல்லைவேந்தன், ம. ம. க. ஷேக் தாவுத், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன், செய லாளர் அன்பு சித்தார்த்தன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி செய லாளர் சிவகுமார் மற்றும் தோழர் கள் பங்கேற்றனர்.
தீர்மானம்: 28.9.2020அன்று காலை 10 மணிக்கு கடலூர், வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
No comments:
Post a Comment