அய்.நா. அமைப்பு வேதனை
ஜெனீவா, செப்.4 கரோனா தொற்று களால் வருகிற 2021ஆம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப் படுவார்கள் என அய்.நா. அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப் புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொரு ளாதார வளர்ச்சியும் குறைந்து உள் ளது. இதனை மீட்டெடுக்கும் முயற்சி யில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு ள்ளன. இந்நிலையில், அய்.நா. மகளிர் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், உல கம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றுகளால் வருகிற 2021ஆம் ஆண்டில் பெண்கள், சிறுமிகள் என 4.7 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என வேதனை தெரிவித்துள்ளது.
வறுமைக் கோட்டிற்கு மேலே அவர்களை கொண்டு வந்ததற்கான பல ஆண்டுகால வளர்ச்சி நிலை, மீண்டும் பின்னோக்கி செல்லக் கூடிய சூழல் உள்ளது. இவற்றில் கரோனா பாதிப்புகளால், தெற்காசியாவில் பெண்களின் வறுமை விகிதம் 2021ஆம் ஆண்டில் அதிகரிக்கும்.
ஆண்களைக் காட்டிலும் பெண் களில் 25 முதல் 34 வயதுடையவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வறுமை நிலையை அடைவார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment