நீதிக்கட்சி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு 1917 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28 ஆம் தேதி நடைபெற்ற மாகாண மாநாட்டில் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாக ராயர் பார்ப்பனர் அல் லாத மாணவர்கள் கல்லூரி களில் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி பேசினார். அதாவது தனக்கேற் பட்ட அனுபவத்தைச் சுட்டி காட்டினார்.
‘‘நான் பச்சையப்பன் கல் லூரி அறக்கட்டளைக்கு நிரு வாகக் குழுத் தலைவராக இருந்த சமயம் எனது ஜமீன்தார் நண்பர் ஒருவர் தனது பிள் ளைக்கு, கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி என்னைச் சிபாரிசு செய்யச் சொன்னார்.
பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால், இந்த மாணவர்க்கு எப்படியும் ஓர் இடம் தர வேண் டுமென்று கடிதம் எழுதி பச் சையப்பன் கல்லூரி தலைமை ஆசிரியர்க்கு அனுப்பி வைத் தேன். சில நாள் களுக்குப் பிறகு கல்லூரியில் எந்த இடமும் இல்லை என்று கூறி எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின் பல பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித் திருப்பதை அறிந் தேன். இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தி இருக்கும்?
பொதுவாக நான் நிருவாக விஷயத்தில் தலையிடுவ தில்லை. அப்படித் தலையிடு வது தவறு என்றும் கருதி வந்தேன். இந்தச் சம்பவத்திற் குப் பிறகு மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் விஷயத் தில் நான் கண்டிப்பான விதி முறைகளை வகுத்தேன். என் அனுமதியின்றி யாரையும் கல்லூரியில் சேர்க்கக் கூடாது என்றும் கூறிவிட்டேன்.''
பிட்டி தியாகராயரின் இப் பேச்சு, ‘நீதிக்கட்சி ஆட்சி அமைவதற்கு முன்பாக இருந்த நிலையாகும். ஆட்சி அமைந்த பிறகு, அதே நிலை நீடித்ததால் கல்வி அமைச்சரான ஏ.பி. பாத்ரோ கல்லூரிக் குழுக்களை அமைத்தது எவ்வளவு சரியான நடவடிக்கை என்று அறிந்து கொள்ள முடிகிறது.
(பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் தலைவ ராக இருந்தும் ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு கல்லூரியில் இடம் பெற்றுத்தர முடிய வில்லை என்பது கவனிக்கத் தக்கது.)
அதேநேரத்தில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது D.கிருஷ்ணாராவ் என்ற பார்ப் பனர் ஹூஸீர் செரஸ்தார் என்ற மாவட்ட ஆட்சியருக்கு இணையான பதவியில் இருந் தார். அவர் கடப்பா மாவட்டத் தில் தனது உறவினர்கள் 116 பேரை அரசுப் பணிகளில் அமர்த்தினார். இது கடப்பா மாவட்டத்தில் என்றால், அனந் தப்பூர் மாவட்டத்தில் தனது உறவினர் 108 பேரை அரசுப் பணிகளில் அமர்த்தினார்.
அறக்கட்டளையின் தலை வர் ஒருவரால் அந்த அறக் கட்டளையின் சார்பில் நடக்கும் ஒரு கல்லூரியில் ஒரே ஒரு மாணவரைக்கூட சேர்க்க முடியவில்லை. அதேநேரத்தில், ஓர் உயர்ந்த அதிகாரத்தில் பணியாற்றிய பார்ப்பனர் ஒரு வரால் தம் உறவினர்களை நூற் றுக்கணக்கில் பணியமர்த்தம் செய்ய முடிகிறது; பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் நிலை இதுதான் - தெரிந்து கொள்வீர்!
- மயிலாடன்
No comments:
Post a Comment