தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகரத்தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் மாநகரில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், கழகத் தோழர்கள், கழக ஆதரவாளர்கள், தஞ்சாவூர் வாழ் உரத்தநாடு பகுதி மக்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந் தித்து திரட்டப்பட்ட 19 - ஆண்டு சந்தாக்கள், 32 - அரையாண்டு சந்தாக்கள் என 51 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.63,000/- தந்தை பெரியார் 142-ஆவது பிறந்தநாள் பரிசாக விடுதலையின் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களிடம் முதல் தவணையாக பெருமகிழ்வுடன் வழங்குகிறோம் என்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment