பெண் விடுதலைக்காக இறுதி வரை போராடியவர் தந்தை பெரியார்
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி பேச்சு
பட்டர்வொர்த், செப்.24 பினாங்கு மலேசிய திராவிடர் கழக ஏற்பாட்டில், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எளிய முறையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவரும், பினாங்கு மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவருமான சா.த. அண்ணாமலை இந்த விழாவுக்கு தலைமையேற்றார்.
பட்டர்வொர்த் நகரம், ஆனந்த பவன் உணவக மாநாட்டு அறையில் நடந்த இவ்விழாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனி யாண்டி, டத்தோ அ. சவுந்தரராஜன், சூரியா உணவக உரிமையாளர் சூரியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மலேசியத் திராவிடர் கழக பினாங்கு மாநில செயலாளர் சொ. மருதமுத்து வருகையாளர்களை வரவேற்று பேசியதுடன், தந்தை பெரியார் தமிழ் இனத்துக்கும், தமிழ்மொழிக்கும் ஆற்றிய சீரிய தொண்டுகளையும் நினைவு கூர்ந்து பேசினார்.
மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் சா.த. அண்ணாமலை தமதுரையில், தந்தை பெரியார் பிறந்தநாள் தேசிய அளவில் கடந்த 17.9.2020 ஆம் நாள் தலைநகர் கோலாலம்பூர் -_ கிரேண்ட் பசிபிக் தங்கு விடுதியில் சிறப்பாக நடை பெற்றதைக் கூறினார்.
பட்டர்வொர்த் நகரில் நடை பெறும் இவ்விழாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேரா சிரியர் பி. இராமசாமி, தந்தை பெரியார் விழாவில் கலந்து கொண்ட தற்கு நன்றி பாராட்டினார்.
இதனிடையே, பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி தமது சிறப் புரையில், திராவிடர் இனம் ஆதி இனம் என்பதுடன் தமிழர்கள் ஜாதி எனும் கொள்கையில் வகைப்படுத்தப் படவில்லை என்பதுடன் ஆரிய கலப் பினால் ஜாதி எனும் பகுத்து பார்க்கும் வேற்றுமைகள் தோன்றியதாக கூறினார்.
பெரியார் பெண் அடிமைக் கொள் கைகளை அடியோடு ஒழிக்க வேண் டும் எனவும் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்திட, மூட நம்பிக்கைகளை ஒழிக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட் டார் என மேலும் சொன்னார்.
பெரியார் கூறிய கருத்துகள் யாவும் தேவையானவற்றை தெரிந்து பகுத் தறிந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை கூறினாரே ஒழிய அவர் எக்காலத் திலும் தான் கூறியவற்றை கண் மூடித்தனமாகக் கடைப்பிடிக்க வற் புறுத்தியதில்லை என்றார் அவர்.
நமது நாட்டைப் (மலேசியா) பொறுத்தவரை ஜாதியின் தாக்கம் மிகுதியாக இல்லை தமிழ்நாட்டில் நடந்த போராட் டங்கள் நமது நாட்டுக்கு சம்பந்த மில்லாதது என விவரித்த பேராசிரியர் ப. ராமசாமி, பெரியாரின் சிந்த னைகளையும் பகுத்து அறிந்து கொள் ளும் கொள்கையையும் கடைப் பிடித்தால் போதுமானது என்றார்.
உலகளாவிய நிலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் மகத்தான பணியை ஆற்றியிருக்கிறார் என்பதை மறுப் பதற்கில்லை என்று எடுத்துரைத்தார்.
நன்றி: - 'தமிழ் மலர்' 22.9.2020
No comments:
Post a Comment