சென்னை, செப்.2, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், தலைமைச் செயலாளர் சண்முகம், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலைவாணர் அரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment