பெரியார் கேட்கும் கேள்வி! (112) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (112)


குற்றம் செய்தவன் தண்டனை அடையத்தக்க நீதி நமது நாட்டில் வழங்கினால் இவ்வளவு குற்றங்கள் நமது நாட்டில் வளருமா? இதற்கு இடையூறாயிருப்பவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு வக்கீல் ஒரு சமயத்தில் தனது பெருமையை சொல்லிக் கொள்ளும்போது 22 தடவை கொலை செய் தவனை 22 தடவை தப்பிக்க வைத்தேன் என்று சொல்லிக் கொண்டாராம். இதுதான் படித்தவர்களின் மேன்மை. இன்னமும் படித்தவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் படிக்காதவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் பார்த்தால் படித்தவர்களில் 100க்கு 90 பேர் அயோக்கியர்களாக இருந்தால், படிக்காதவர்களில் 100க்கு 10 கூட அகப்பட மாட்டான். இம்மாதிரியான படிப்பை படிப்பு என்று சொல்லி அதற்கு யோக்கியதை கொடுத்து வந்தால் அந்த நாடு ஒழுக்கமடையுமா? யோக்கியமடையுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 14.11.1926


‘மணியோசை’


No comments:

Post a Comment