சென்னை, செப்.27 பள்ளிக்கு வரும் மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல் மாணவர்கள் பாதுகாப்பை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
"10 முதல் 12ஆ-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக் கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, '50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாமா என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு செய்வார்'; 'பாடத் திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித் துள்ள பேட்டிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் மீண்டும் குழப் பத்தில் ஆழ்த்தி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி யாக்கியுள்ளது.
கரோனா பேரிடரால் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. தங்கள் குழந்தைகள் நேரடியாக வகுப்பறைக் கல்வி கற்க முடியாமல் இருக்கிறதே என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள்.
இதுபோன்ற நேரத்தில், அக்டோபர் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கிறோம் என்று அறிவித்து விட்டு, இப்படிக் குழப்பமான பேட்டிகளை அமைச்சர் கொடுத்து வருவது சரியல்ல. மாணவர்களின் பாதுகாப்பை இந்த அரசு ஏதோ விளையாட்டாக நினைத்துச் செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
ஆகவே, 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ள அதிமுக அரசு, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாது காப்பை மிகக் கவனமாக, முன்னெச் சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடு களுடன், உறுதி செய்ய வேண்டும்.
கரோனா எண்ணிக்கை சென் னையில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டுப் பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது.
’எழுத்து பூர்வமாகப் பெற்றோ ரிடம் அனுமதி பெற்றுத்தானே வந்தீர்கள்' என்று மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல், அதிமுக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாமல், மாணவர்கள் ஒவ்வொரு வரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறேன்".
இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment