சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது

சென்னை, செப்.27 சென்னை ராஜீவ் காந்தி (ஓஎம்ஆர்) சாலை சுங்கச் சாவடிகளில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.


இதுதொடர்பாக அய்.டி. விரைவுச் சாலை நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


சென்னை ராஜீவ் காந்தி (அய்.டி. காரிடார்) சாலையின் முதல் திட்டப் பகுதியை பயன்படுத்தும் வாகனங் களுக்கு வசூலிக்கப்பட வேண்டிய சுங்கக் கட்டணம் கடந்த 2006 முதல் 2036 வரையிலான 30 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு களுக்கு ஒருமுறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். குறிப்பிட்ட ஆண்டு களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அய்.டி. விரைவுச் சாலை நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஆட்டோவுக்கு ஒருமுறை செல்ல ரூ.10, சென்றுவர ரூ.19, ஒரு நாளுக்கு ரூ.33, மாதத்துக்கு ரூ.311 வசூ லிக்கப்படும். காருக்கு ஒருமுறை ரூ.30, சென்றுவர ரூ.60, ஒருநாளுக்கு ரூ.100, மாதத்துக்கு ரூ.2,390 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை ரூ.49, சென்றுவர ரூ.98, ஒருநாளுக்கு ரூ.136, மாதத்துக்கு ரூ.3,050, பேருந்துக்கு ஒருமுறை ரூ.78, சென்றுவர ரூ.154, ஒருநாளுக்கு ரூ.231, மாதத்துக்கு ரூ.5,050 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சரக்கு வாகனங்களுக்கு ஒருமுறை ரூ.117, சென்றுவர ரூ.220, ஒருநாளுக்கு ரூ.340, மாதத்துக்கு ரூ.7,500, பல அச்சு வாகனங்களுக்கு (எம்ஏவி) ஒருமுறை ரூ.234, சென்றுவர ரூ.440, ஒருநாளுக்கு ரூ.676, மாதத்துக்கு ரூ.15,110 என நிர் ணயிக்கப்பட்டுள்ளது. கார்களை பொறுத்த வரை ஒரு மாதத்துக்கு 60 டிரிப்களுக்கு ரூ.1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 


பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல


மும்பை உயர் நீதிமன்றம் கருத்து



மும்பை, செப்.27 மும்பையில் உள்ள மாலட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடத்திய காவல்துறையினர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 3 பெண்களை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பை பெருநகர நீதிமன்ற உத்தரவின்படி, அந்த 3 பெண்களையும் சீர்திருத்த இல்லத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.


இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண்கள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவானது, நீதிபதி பிரித்வி சவான் முன்பு  விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:


இந்த வழக்கில் மனுதாரர்கள் 3 பேரும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆவர். அவர்களுக்கு தங்களின் தொழிலை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் இருக்கிறது. அதுமட்டுமல் லாமல், பாலியல் தொழில் என்பது சட்டப்படி குற்றமோ அல்லது தண் டனைக்குரிய செயலோ கிடையாது.


மேலும், இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், அந்தப் பெண்கள் விபச் சார நோக்கத்துக்காக மற்றவர்களை வற்புறுத்தினார்கள் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கும்போது, அந்தப் பெண்களை சீர்திருத்த இல்லத்தில் அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறானது. எனவே, அவர்களை உட னடியாக அங்கிருந்து விடுவிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment