புதுடில்லி, ஆக .2- தற்போதைய சூழலில், சென்னை உயர்நீதி மன்றத்தின் பெயரை ‘தமிழ் நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்யவோ, தமிழை வழக்காடு மொழி யாக்கவோ இயலாது என்று மத்திய சட்டத்துறை அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வுக்கு மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:
‘சென்னை உயர்நீதிமன் றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மாநில மொழியான தமிழை உயர் நீதிமன்ற அலுவல், வழக்காடு மொழியாக்க வே ண்டும்’ என்று 2019 டிசம்பர் 4ஆம் தேதி மாநிலங்களவை யில் தாங்கள் கோரிக்கை வைத் தீர்கள். பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங் கள் 1862ஆம் ஆண்டு காப் புரிமை பட்டயச் சட்டப்படி தோற்றுவிக்கப்பட்ட சார்ட் டர்டு உயர் நீதிமன்றங்கள். விடுதலைக்குப் பிறகும், அர சமைப்பு சட்டப் பிரிவு 225இன்படி தொடர்ந்து அதே பெயரில் இயங்குகின் றன. இவற்றை மாநிலங்களின் பெயரிலேயே மாற்றுமாறு மகாராட்டிரா, மேற்குவங்கம், தமிழக அரசுகள் விடுத்த பரிந்துரையை ஏற்று, பெயர் திருத்தம் தொடர்பான சட்ட முன்வரைவு, மக்களவையில் 2016 ஜூலை 19இல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதே கோரிக்கையுடன் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, மத் திய அரசுக்கு 2016 ஆகஸ்ட் 1இல் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், பாரம்பரியமான இப்பெயர்களை மாற்றுவது சரியாக இருக்காது என கல்கத்தா உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல தரப்பு களில் கருத்து வேறுபாடு எழுந்ததால் இது குறித்து மீண்டும் கலந்துபேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் 16ஆவது மக்களவை யின் காலம் முடிவுக்கு வந்த தால், சட்ட முன்வரைவும் செயலிழந்துவிட்டது. நாடு முழுவதும் அந்தந்த மாநிலங் களின் பெயரிலேயே உயர் நீதிமன்றத்தின் பெயர்களை மாற்றக் கோரி உச்ச நீதிமன் றத்தில் ஒரு வழக்கு தொட ரப்பட்டு நிலுவையில் உள் ளது.
இதேபோல, உயர்நீதிமன் றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்குவது குறித்து கருநாடகா, குஜராத், சத்தீஸ்கர் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக 1965இல் மேற்கொள்ளப்பட்ட தீர்மா னத்தின்படி, உயர் நீதிமன்றங் களில் இந்தி அல்லது மாநில மொழிகளை அலுவல், வழக் காடு மொழியாக்க உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் கருத்து கேட்கப்பட வேண் டும். ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி இக்கோ ரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி 2016 ஜனவரி 18இல் கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment