மனு நீதி vs சமூக நீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

மனு நீதி vs சமூக நீதி

நீங்கள் ராமன் பெயரை சொல்லிக்கொண்டு ரத யாத்திரை நடத்திக்கொண்டிருந்தபோது நாங்கள் கள்ளிப்பாலிடமிருந்து பெண் குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டங்கள் மூலம் காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.


நீங்கள் மதக் கலவரத்தில் பிசியாக இருந்தபோது நாங்கள் இங்கு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளையும், அய்.டி. பார்க்குகளையும் கட்டிக் கொண்டிருந்தோம்.


நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி அங்கு அப்பாவிகளை கொலை செய்து கொண்டிருந்தபோது இங்கு நாங்கள் அம்மா உணவகங்களை அமைத்து அனைவருக்கும் வயிறாற சோறு போட்டுக்கொண்டிருந்தோம்.


கோமியமே அருமருந்து. அதை வைத்து சகல நோய்களையும் தீர்க்க முடியும் என நீங்கள் அங்கு பேசிக்கொண்டிருந்தபோது இங்கு நாங்கள் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி கட்டிக்கொண்டிருந்தோம்.


நீங்கள் ஹஜ் மானியத்தை நிறுத்தியபோது நாங்கள் ஹஜ் மானியத்தோடு சேர்த்து ஜெருசலேம் புனித பயணம் செல்லவும், இந்துக்கள் கைலாச யாத்திரை செல்லவும் மானியங்களை கொடுக்க ஆரம்பித்தோம்.


நீங்கள் வட நாட்டில் பள்ளிக்கூடங்களை கோசாலைகளாக மாற்றிக் கொண்டிருந்தபோது நாங்கள் எங்கள் மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினிகளை விலையில்லாமல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.


இதுபோல் இன்னும் நிறைய பட்டியலிடலாம்.


ஏன்னா நீங்க வேற நாங்க வேற.


உங்கள் சித்தாந்தம் மனு நீதி


எங்கள் சித்தாந்தம் சமூக நீதி.


உங்களால் எப்போதும் ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் பக்கம் நிற்கவே முடியாது. அதுவரை நீங்கள் எந்த வேஷம் போட்டுக்கொண்டு எங்களிடம் வந்தாலும் இந்த தமிழ் மண் உங்களை நம்பாது.


- நம்பிக்கை ராஜ் (வாட்ஸ் அப்பிலிருந்து)


No comments:

Post a Comment