திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து!
சென்னை, ஆக.29 - "கலைஞ ருடைய உழைப்பை யும் தாண்டி உழைக்கக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய ஒப்பற்றத் தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மூன்றாவது ஆண்டில் தலைமைப் பொறுப்பேற்று அடி எடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச் சிக்குரிய ஒன்றாகும். இந்த இரண்டு ஆண்டு நிறைவில் அவர் கலைஞருடைய உழைப்யையும் தாண்டி உழைத்திருக்கிறார் என்ற பெருமையோடு எல்லோ ரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு அவர் கண்ட களங்கள் ஏராளம் இந்த இரண்டாண்டுகளில்!
ஏற்கெனவே அவர் சிறைச் சாலை முதல் நாடாளுமன்றம் வரையிலே பக்குவப்படுத்தப் பட்டவராக இருந்தாலும் இந்த இரண்டாண்டுகளிலே தனித் தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு பிரச்சினைகளை அவர் எதிர்கொண்ட விதம் இருக் கிறதே; அது சட்டசபை போராட் டங்கள் ஆனாலும், சட்டப் போராட்டங்கள் ஆனாலும், மக்கள் மத்தியிலே கருத்துகளைக் கொண்டு செல்வதாக இருந் தாலும், அகில இந்தியப் பிரச் சினைகளாக இருந்தாலும், மாநி லங்களின் உரிமையாக இருந் தாலும், அத்தனை பேர்களுக்கும் வழி காட்டக் கூடிய அளவிற்கு அனைத்து முதல்வர்களையும், தலைவர்களையும் அனைத் திந்திய அளவில் அழைத்துச் செல்லக் கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவராக இன்றைக் குப் பிரதிபலித்துக் கொண்டி ருக்கிறார்.
உதயசூரியனின் கதிர்கள் ஓங்கி எங்கும் இருட்டை வெளியே தள்ளக் கூடிய அளவிற்கு அவருடைய உழைப்பு பயன்பட்டுக் கொண்டிருக் கிறது. எட்டு மாதங்களில் விரைவில் அவர் மீண்டும் அரியணை ஏறுவது அவருக்காக அல்ல, இந்த இனத் துக்காக, ஆட்சிக்காக அல்ல, நம் இனத்தின் எழுச் சிக்காக. வாழ்க வளர்க. அவரு டைய தொண்டு தொடர்க!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துக் கூறினார்.
No comments:
Post a Comment