கப்பல் கட்டும் தளத்தில் விபத்தில் பத்து பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 2, 2020

கப்பல் கட்டும் தளத்தில் விபத்தில் பத்து பேர் பலி


விசாகப்பட்டினம், ஆக. 2- ஆந் திரா மாநிலம் விசாகப்பட்டி னத்தில் ஹிந்துஸ்தான் கப் பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் பத்து பேர் பலியானார்கள். 


புதிதாக வாங்கப்பட்ட கிரேனை சனிக்கிழமை காலை 11 மணியளவில்  ஊழியர்கள் பரிசோதனை செய்த போது அது சரிந்துவிழுந்தது. தக வலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். காயமடைந்தவர் களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தர விட்டுள்ளது. காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் மீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மல்காபுரம் காவல்துறையி னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.


விபத்து குறித்து தகவல றிந்த குடும்பத்தினர், கப்பல் கட்டும் தளம் முன்னர் குவிந் தனர். தங்களை உள்ளேவிட காவல்துறை அனுமதி மறுப் பதாக குற்றம்சாட்டினர். இத னால்,  உள்ளே இருக்கும், தங்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என தெரிவித்தனர். இதற்கி டையில் உயிரிழந்தவர்களின் ஆறு பேர் உடல்கள் மீட்கப் பட்டன. சிந்தியா ஸ்டீம்ஷிப்  நிறுவனத்தால் 1941- ஆம் ஆண்டு தொழிலதிபர் வால் சந்த் ஹிராசந்தால் நிறுவப் பட்ட நாட்டின் பழமையான கப்பல் கட்டும் தளமாகும். 1961 ஆம் ஆண்டில் கப்பல் தளம் தேசியமயமாக்கப்பட்டு இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்.எஸ்.எல்) என பெயர் மாற்றம் செய்யப்பட் டது. 2010 ஆம் ஆண்டு கப் பல்துறை அமைச்சகத்திலி ருந்து பாதுகாப்பு அமைச்சகத் திற்கு மாற்றப்பட்டது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment