ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருத மொழி, அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என்ற தவறான வாதத்தில் திணிக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

  • காஷ்மீரில் மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் மெக்பூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • புதிய கல்விக் கொள்கையில் மொழி குறித்த அறிவிப்பு கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • புதிய கல்விக் கொள்கை பற்றிய பயம் அதன் உள்ளடக் கத்தின் காரணமாக எழுகிறது என பிரதாப் பானு மேத்தா தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


தி இந்து:



  • புதிய கல்விக் கொள்கையில் அய்ந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம் இல்லை. ’எங்கெல்லாம் வாய்ப்பு உண்டோ அங்கே தாய் மொழி கற்பிக்கலாம். இதனை அந்தந்த மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

  • இந்தியாவின் முதன்மைத் துறைகளான நிலக்கரி, குரூட் ஆயில், எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் அனைத்துத் துறைகளும் ஜூன் மாதத்தில் 15% விழுக்காடு வளர்ச்சி குறைந்துள்ளது.

  • மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாவில், புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள தாய் மொழி அல்லது உள்ளூர் மொழி கொள்கையை மத்திய அரசே நிறைவேற்ற இயலாது.


- குடந்தை கருணா


1.8.2020


No comments:

Post a Comment