நீதிக்கட்சி ஆட்சி, காமராசர் ஆட்சி, கலைஞர் ஆட்சிகளால் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்கள் அறிவு சக்தியானார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

நீதிக்கட்சி ஆட்சி, காமராசர் ஆட்சி, கலைஞர் ஆட்சிகளால் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்கள் அறிவு சக்தியானார்கள்

‘புதிய கல்விக் கொள்கை’ பற்றிய காணொலிக் கருத்து மேடையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்



சென்னை, ஆக. 3- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலை மையில் நேற்று (2-8-2020) ‘புதிய கல் விக் கொள்கை’ பற்றிய காணொலிக் கருத்து மேடை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு, தொலைக் காட்சிகளிலும் நேரலையாக ஒளி பரப்பப்பட்டது.


மக்களவை குழுத்துணைத் தலை வர் கனிமொழி, மேனாள் துணை வேந்தர் வசந்திதேவி,திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் அ.கருணானந்தம், அறிவியலாளர் இராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.


இந்நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வரு மாறு:


2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந் திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்தது. வந்த உடனேயே கல்வியில் கை வைக்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு வந்தி ருப்பது கஸ்தூரிரங்கன் குழுவினு டைய அறிக்கை. ஆனால், இதற்கு முன்னால் டி.எஸ்.ஆர். சுப்பிரமணி யன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார் கள். அவர் 200 பக்கத்துக்கு ஓர் அறிக் கையைக் கொடுத்தார். அந்த சுப்பிர மணியம் அறிக்கையைக் கண்டித்து 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் நாளன்று தலைவர் கலைஞர் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட் டார்கள்.  அதில்,



  1. புதிய கல்விக் கொள்கையை உரு வாக்குவதற்கு கல்வியாளர் தலைமை யில் குழுவை உருவாக்காமல் அரசு அதிகாரி தலைமையில் குழு அமைத் தது ஏன்?

  2. இக்குழுவின் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.

  3. பொதுத்தேர்வுகளை வரிசை யாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண் ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகும். இதனால் கிராமப் புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.

  4. ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனை தொழிற்பயிற்சிக்கு அனுப்ப லாம் என்பது நயவஞ்சகம் இல்லையா?


இது மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய் யத்தை ஏற்படுத்துகிறது.



  1. அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்.

  2. பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும்.

  3. கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மய மாகி விடும்; கல்விக் கட்டண உயர் வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும்.

  4. பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப் பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

  5. இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுக மாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

  6. "புதிய கல்விக் கொள்கை" என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப் படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற் படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை! இப்படி 2016-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார் தலைவர் கலைஞர் அவர்கள்.


நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எதையெல்லாம் சொல்லிப் பயந்தாரோ; அதுதான் இன்று புதிய கல்விக் கொள்கையாக வந்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்யத் திட்ட மிட்டு இருப்பதைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம்.


தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த சமூகநீதி - சனநாயகம் - சமத்துவம் - எல்லோர்க்கும் எல்லாம் - ஒடுக்கப்பட்டோர் உரிமை - தமிழர் இன நலன் - தமிழ்மொழிக் காப்பு - தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் - தமிழக மேம்பாடு ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு இந்த புதிய கல்விக் கொள்கையை அலசி ஆராய்ந்ததில், இதில் சொல்லப்பட்ட எந்தத் தத்துவத்துக்கும் உடன்பாடா னதாக இந்தக் கல்விக் கொள்கை இல்லை.


எனவேதான், இந்தக் கல்வி அறிக்கை குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆய் வுக்குழு அமைத்தோம். அக்குழுவில் பத்து கல்வியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். புதிய கல்விக் கொள் கையில் 400-க்கும் மேற்பட்ட பக்கங் களை இவர்கள் அலசி ஆராய்ந்தார் கள்.


ஓர் அறிக்கையைக் கொடுத்தார் கள்.



  1. இக்கல்விக் கொள்கை காவி மயமாக்கலாக உள்ளது.

  2. வேதக் கலாச்சாரத்தைத் திணிப் பதாக உள்ளது.

  3. சமூகநீதி புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

  4. பெண் கல்வி குறித்துக் கவலைப் படவில்லை.

  5. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  6. தமிழகத்தில் பேரறிஞர் அண் ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு விரோத மாக மும்மொழிக் கொள்கை திணிக் கப்படுகிறது.

  7. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகளின் உரிமைக்கு எதிரா னது.

  8. மதிய உணவுத்திட்டத்தைக் கைவிடுகிறார்கள்.

  9. தொழிற்கல்வி என்ற பெயரால், குலக்கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள்.

  10. மாநில அளவில் 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  11. கலைக்கல்லூரிகளில் சேர்வ தற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது. - இப்படி பல்வேறு பரிந்துரைகளைச் சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது.


28.7.2019 அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூல மாக நேரில் கொண்டு சென்று இந்த அறிக்கை தரப்பட்டது.


இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண் டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர் கள் இந்தக் கோரிக்கையை வைத் தார்கள். ஆனால் அது எதையும் ஏற் காமல் மத்திய அரசு, அந்தக் கொள் கையை அமல்படுத்தி விட்டது.


“மத்திய கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம்” - - என்று நேற்றைய தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.


‘மத்திய அரசுப் பள்ளிகளில் தாய் மொழிக் கல்வியைச் செயல்படுத்த இயலாது' என்று அதிகாரிகள் சொன் னதால் மத்திய அரசு பல்டி அடித் துள்ளது.


“அய்ந்தாம் வகுப்புவரை தாய் மொழியிலேயே பயிற்றுவிக்க வேண் டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கவும் செய்யலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இதே மத்திய அரசுதான்.


இப்போது அதில் மட்டும் பின் வாங்குகிறார்கள் என்றால், இவர்க ளுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது.


இதனால்தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்ட மன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப் பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.


நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இக்கல்விக் கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பான கருத் துக்களைப் பேசி இருக்கிறார்.


“மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கி றோம்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.


“இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாண வர்கள் பலரும் பாதியிலேயே பள்ளி களை விட்டு விரட்டப்படுவார்கள்” என்று பிரதமர் அவர்களுக்கு தாழ் மையுடன் சொல்ல விரும்புகிறேன்.


“அனைவருக்கும் கல்வி கிடைக் கும்” என்று நேற்றைய தினம் பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். “இல்லை பிரதமர் அவர்களே, உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்.” என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


“கல்வித் தரம் மேம்பாடு அடையும்” என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். “கல்வி உரிமையை மறுத்து அனைவரையும் தொழிற் சாலை களை நோக்கி துரத்துகிறீர்கள்” என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.


“தாய்மொழி மூலம் சிந்தித்து, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்துவார்கள்” என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். “இந்தி மூலமாகவும், சமஸ்கிருதம் மூலமா கவும் சிந்திக்க வழிகாட்டுகிறீர்கள்; தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டுகிறேன்.


“வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம்” என்கிறீர்கள். “இல்லை! இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கி இருக்கி றீர்கள்” என்று சொல்கிறேன்.


“வேலைவாய்ப்பைத் தேடாமல் வேலைவாய்ப்பை மாணவர்களே உருவாக்கிக் கொள்ள பாதை அமைத் துள்ளோம்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “இல்லை! மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கடமையில் இருந்து இந்த அரசு நழுவி விட்டது” என்று நான் சொல் கிறேன்.


பிரதமர் சொல்வது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது. பிரதமர் அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார். இந் தக் கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்த மானதாக ஆகிவிடும்.


கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழை கள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக் தியை பெரும்பாலும் இழந்துவிடு வோம். இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.


இவற்றை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பதைப் போல அனைத் துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப் பாக, ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும்.


அறிஞர் அண்ணா அவர்களின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத் துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., மும் மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க் காமல் மவுனம் சாதிக்கக் கூடாது. அப்படி மவுனமாக இருந்தால்; அது அறிஞர் அண்ணாவின் பெயருக்கு அவமானம். அரசியல் ரீதியாக மத்திய அரசுக்குப் பயந்து தமிழ்நாட்டு மக்க ளின் - மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாய கத்தை மதிக்காமல் - அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - நாடாளு மன்றத்தை மதிக்காமல் -- எதிர்க் கட்சிகளை மதிக்காமல் - யார் பேச்சை யும் கேட்காமல் - ஊரடங்குக் காலத் தில் மறைமுகமாகப் புகுத்தப்படும் இக்கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்ப்போம்.


அனைவருக்குமான கல்வி என்பது நமது இலக்கு. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியால் விதைக்கப்பட்ட விதை - இந்த சமூக நீதிக் கல்வி. நீதிக்கட்சியால் விதைக் கப்பட்டு -பெருந்தலைவர் காமராசர் அவர்களால் பள்ளிக் கல்வியாக பயிராகி - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கல்லூரிக் கல்வியாக மரமாகி - இன்று தமிழ்நாட்டு மாண வச் செல்வங்கள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் அறிவுச்சக்தியாகத் திகழ்கிறார்கள்.


அத்தகைய கல்வி ஒளியை அணைய விடமாட்டோம். அதனை அணைக்க நினைப்பவர்களிடமிருந்து, தமிழ்மக்கள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் கல்வி ஒளியைக் காப் போம்".


இவ்வாறு தளபதி மு.க.ஸ்டா லின் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment