இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:
- புதிய கல்விக் கொள்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள், மாநில சுயாட்சி, அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகள் குறித்த தாக்கங்களை ஆராய்ந்திட முன்னாள் கல்வி அமைச்சர்கள் உள்ளிட்ட 21 நபர் கொண்ட ஒரு குழுவை அமைத்து கருத்து தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- குஜராத்தில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியும், மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேலும் பேட்டி அளித்துள்ளனர்.
- புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) நிறைவேற்றப் பட்டால், இமாலாய மலைப் பகுதிகளில் பெரும் அழிவை உண்டாக்கும் என அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், உத்தர்காண்ட், காஷ்மீர், இமாச்சல பிரதேச சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அந்தந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
- இந்தியாவின் ஏனைய மாநிலங்களில், முழு ஊரடங்கில் செய்தித்தாள், இணையம், தொலைக்காட்சி, பேச்சு சுதந்திரம் என மக்களுக்கு இருக்கிறது. ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கில் இவை அனைத்தும் மறுக்கப்பட்ட ஓர் அவலமும் தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தினகரன், சென்னை:
- இட ஒதுக்கீடு வழக்கைப்போல், இன்னல் தரும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்கும், ரத யாத்திரை நடத்திய அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு இல்லை.
தி இந்து:
- புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி பதில் பகுதியில் பிரிசில்லா ஜெபராஜ் பதில் அளித்துள்ளார்.
- சுற்றுச்சூழல் திருத்த வரைவு குறித்து கேள்விக்கு ஜி.அனந்த கிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
- குடந்தை கருணா
2.8.2020
No comments:
Post a Comment