வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் அனைவருக்கும் கரோனா பரவாது ஆய்வுத் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் அனைவருக்கும் கரோனா பரவாது ஆய்வுத் தகவல்

புதுடில்லி,ஆக.4 வீட்டில் ஒருவருக்கு கரோனா வந்தால் மற்ற அனைவருக்கும் பரவும் ஆபத்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு அறிக்கை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் வைரசினால் பாதிக்கப்படுவதில்லை என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறு வனமானது கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘வீட்டிற்குள்ளேயே கரோனா பரவுதல்‘  என்ற தலைப்பில் உலகளவில் வெளி யிடப்பட்ட 13 ஆவணங்களை மறு ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின் அடிப்படையில் அனைவரும் கரோனா வைரசினால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கூற்று உண்மையானதில்லை என்று கூறப்பட் டுள்ளது. ஆய்வு அறிக்கையில் “ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் கூட 80 முதல் 90% குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள் ளனர். இதனால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாவது இல்லை'' எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் திலீம் மாவ் லங்கர் கூறுகையில்,


“ஒருவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து உறுப்பினர் களும் நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டதாக சில குடும்பங்கள் மட்டுமே உள்ளன. கரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தவர்களின் வீடுகள் கூட உள்ளன. ஆனால் இந்தவீட்டில் வேறு எந்த குடும்ப உறுப்பினரும் கரோனா வால் பாதிக்கப்படவில்லை. அதேபோல் குடும்பத்தில் முதியவர்களிடம் இருந்து குழந்தைக்குப் பரவுதல் குறைவாக உள்ளது.


ஆனால், வயது வந்தவர்களிடம் இருந்து முதியவருக்குப் பரவுதல் கூட 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே” என்றார். ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் கூட 80 முதல் 90 சதவீதம் குடும்ப உறுப்பினர் களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவ தில்லை.


No comments:

Post a Comment