டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- முக நூல் நிறுவனம் இந்தியாவில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சாதகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
- வாட்ஸ் அப் செயலியின் போக்கு பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருப்பதை அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில், மத்திய அரசின் அனுமதியின்றி ஊரடங்கை அறிவிக்க மாநிலங்களுக்குத் தடை; செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் துவங்கும்; 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு ஆசிரியரைச் சந்திக்க செல்லலாம்; இ-பாஸ் கட்டாயம் கிடையாது போன்ற தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஜனநாயக நாடான இந்தியாவில், சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் நாட்டுக்கும் எதிரான சக்திகள் நாட்டில் வெறுப்புணர்வையும் வன்முறை விஷத்தை யும் பரப்பி வருகின்றன. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு இது போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ளும் என்றும், அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் யாரும் கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார் கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசினார்.
தி டெலிகிராப்:
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தலைமைத் தகவல் ஆணையர் பதவி மீண்டும் நிரப்பப்படாமல் உள்ளது. மோடி அரசு ஆட் சிக்கு வந்த இந்த ஆறு ஆண்டுகளில், அய்ந்து முறை இதே போன்று ஆணையர் பதவியைக் கால தாமதம் செய்து நிரப்புகின்ற போக்கு உள்ளது.
- குடந்தை கருணா
30.8.2020
No comments:
Post a Comment