கல்லக்குறிச்சி மாவட்ட மகளிரணித் தலைவர் வை.பழனியம்மாள் இணையரும், கல்லக்குறிச்சி மாவட்ட மேனாள் தலைவருமாகிய சுயமரியாதைச் சுடரொளி அ.கூத்தன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.08.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ருபாய் ஆயிரமும் ஆக மொத்தம் ரு.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
- - - - -
அண்ணாநகர் பகுதி தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளராகவும், சென்னை மாவட்ட பிரதிநிதியாகவும், தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்குரைஞராகவும், சென்னை சூளை மேடு பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும், 1985ஆம் ஆண்டு நடை பெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில் சிறை சென்றவருமான வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 9ஆம்ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2020) அவரது துணை வியார் ம.புஷ்பாமணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா கணேஷ்பிரபு ஆகியோர் ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!
No comments:
Post a Comment