ஊரடங்கு கட்டுப்பாடுகள்  நீட்டிப்பு புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

ஊரடங்கு கட்டுப்பாடுகள்  நீட்டிப்பு புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி அறிவிப்பு


புதுச்சேரி, ஆக. 1- புதுச்சேரியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படு கிறது என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊர டங்குத் தளர்வுகளை அறிவித்துள்ள நிலை யில், புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டிய தளர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்க முதலவர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதுச்சேரி தலை மைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று (ஜூலை 31) மாலை நடைபெற்றது.


இக்கூட்டத்துக்குப்பின் முதல்வர் நாரா யணசாமி செய்தியாளர்களிடம் கூறியதா வது,


 ''மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் ஒரு சில கட் டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல் லூரிகள், திரையரங்குகள் திறக்கக்கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரயில்கள், விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜிம், யோகாசனக் கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் திறக்கலாம் என அறி விக்கப்பட்டாலும் அதற்கான விதிமுறை களை விரைவில் அறிவிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங் களுக்கும் சில விதிமுறைகள் விதிக்கப் பட்டுள்ளன.


சுதந்திர தினத்தில் முதல்வர் கொடி யேற்றி அணிவகுப்பை ஏற்கலாம் என்றும், சுதந்திர தின உரையாற்றலாம் என்றும், விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களுக்கு முன்னுரிமை அளித்து அழைக்க வேண்டும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறைகள் புதுச்சேரியில் அமல்படுத்தப்படும்.


புதுச்சேரியில் கடைகள், மால், ஓட்டல் களைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு இரவு 9 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப் பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைக்குள் வர இ-பாஸ் நடை முறை தொடரும்.


ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊர டங்கு  கிடையாது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு செய்தால் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கரோனா பரவ வாய்ப்பு உருவாகும். மாஹே பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்படும். நான் கூறியுள்ளது போன்று கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடுவது, வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது போன்றவை விதி முறைகள் அனைத்தும் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கும் பொருந்தும். மேலும் சில தளர்வுகள் குறித்து அடுத்த 10 நாட் களுக்குப் பிறகு அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.''


இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


No comments:

Post a Comment