மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய காணொலிப் பயிற்சி வகுப்பு ஒன்றில், தொடர்ந்து இந்தியிலேயே பேசினார், (அய்.ஏ.எஸ். அல்லாத) அத் துறையின் செயலாளரான வைத்யா ராஜேஷ் கோட்டேச்சா. அனைவருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் உரையாற்றக் கேட்ட தமிழகத்தின் பிரதிநிதிகளை ‘இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்’ என்று திமிராகச் சொன்னார். இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த நாம், தமிழ், தமிழர்கள் மட்டுமல்ல... தமிழர் மருத்துவம் என்ற எண்ணத்தில் சித்த மருத்துவம் மீதும் அதே வெறுப்புப் பார்வை, வருணாசிரமப் பார்வைதான் வடவர்களுக்கு என்பதை எடுத்துச் சொல்லியிருந்தோம்.
அவ் வகையில் இந்தக் கட்டுரையை இக் காலகட்டத்தில் அறிமுகம் செய்து, அதிலிருந்து சில முக்கியப் பகுதிகளை வெளியிடுவது பொருத்தம் எனக் கருதுகிறோம். சித்த மருத்துவத்தின் மீதான அவர்களின் தாழ்வெண்ணம், ஆயுர்வேத மருத்துவ நூல்களின் ரகசியம், சமஸ்கிருதத்தின் ரகசியம், மருத்துவத்திற்குள்ளேயே நிலவும் வருணபேதம் என பலவற்றை இக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. ஆனந்தம் பண்டிதர் அவர்கள் சித்த மருத்துவத்தில் கற்றுத் துறைபோகிய அறிஞர். பல்துறை சார்ந்த அவர் தம் கட்டுரைகளைத் தொகுத்து அளித்துள்ள பதிப்பாசிரியர் கோ.ரகுபதி அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்.
நூல் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
இக் கட்டுரை சற்று நெடியதெனினும் வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுகிறோம். (ஆ-ர்)
No comments:
Post a Comment