தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று - பாராட்டுகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று - பாராட்டுகிறோம்!


தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று இன்று (3.8.2020) திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இறுதிவரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இருக்கவேண்டும்.


இதோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக் கொள்கை, பல நுழைவுத் தேர்வுகள் - இவைபற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டினையும் அறிவித்தலும் அவசியம்!


இந்த முடிவை உடனடியாக அறி வித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


3.8.2020


No comments:

Post a Comment