கோவை, ஆக.1 கோவை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் ச.சிற்றரசு அவர்கள் காவல் துறையில் அளித்ததுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 17.7.2020 அன்று கோயமுத்தூர் சுந்தரா புரத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மோசமான காவி சாயம் பூசிய பாரத் சேனா அமைப்பினை சார்ந்த அருண்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் பதட்டமான பல்வேறு சமூக விரேத சம்பவங்கள் நடைபெற்று பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதற்கிடையில் பாரத் சேனா என்கின்ற பதிவு செய்யப்படாத அமைப்பின் தலைவராக சொல்லி கொள்ளும் செந்தில் கண்ணன் என்பவர் சமூகங்களிடையே வன் முறையை தூண்டும் வகையில் கோயமுத்தூர் பிரஸ் கிளப்பில் 27.7. 2020 அன்று பேசியிருப்பது கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை களை ஏற்படுத்தி உள்ளது. அவர் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய எங்கள் அமைப்பின் தொண்டர் அருண்கிருஷ்ணன் செயலுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம் என்றும், இனி மேலும் அப்படித்தான் தொடரும் என்றும், அனைத்து பத்திரிகையாளர் முன்னிலையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவருடன் இருந்த
2 நபர்கள் அவருக்கு தூண்டுதலாக இருந்துள் ளார்கள். இது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட் டுள்ளது. இது கோவையில் மிகுந்த பதட்டத்தை உருவாக்கி உள்ளது. சமூக, மதக் கலவரத்தை உருவாக்கும் அரசியல் லாபம் அடையும் வகையில் பேசியுள்ளார்.
சமூகத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள நிலையில், அதனை மதிக்காமல் பகிரங்கமாக சமூகங்களுக்கிடையே பிரச் சனைகளை ஏற்படுத்தும் எண்ணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ள பாரத் சேனா தலைவர் செந்தில் கண்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டு நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கோவை மாவட்டத் தலைவர் ம. சந்திரசேகர், மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ் செல்வம், மாநகரத் தலைவர் புலியகுளம் க.வீரமணி, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இராசி பிரபாகரன், மண்டல மாணவரணி செயலாளர் ஆ.பிரபாகரன், கழகத் தோழர்கள் தமிழ்முரசு, கோபாலகிருஷ்ணன், இலைகடை செல்வம், தெ.குமரேசன், சுரேசன், வெற்றிச் செல்வன், குறிச்சி ஆனந்த், ஆட்டோ சக்தி, அ.மு.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment