பூமிக்கடியில் எரிவாயு குழாய் பதிக்க பாதுகாப்பு கேட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

பூமிக்கடியில் எரிவாயு குழாய் பதிக்க பாதுகாப்பு கேட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

மதுரை, ஆக. 1- இராமநாதபுரம்- தூத்துக்குடி குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்காக பூமிக்கடியில் குழாய் பதிக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்கக்கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது.


இது தொடர்பாக இந் தியன் ஆயில் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் கவுதமன், உயர்நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனு:


இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய்மூலம் இயற்கை எரி வாயு (கேஸ்) கொண்டு செல் லும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. இதற்காக 142 கி.மீ தூரத்திற்கு பைப்லைன் அமைக்கப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசல் கிராமத்தில் பணிகள் நடைபெற்று வரு கிறது. இங்கிருந்து முள்ளக் காடு கிராமத்தில் சுமார் 2.4 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும்.


ஆனால் பொட்டல்காடு கிராமத்தில் பூமிக்கடியில் குழாய் பதிக்க ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.


இதனால் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, திட்டத்தை விரைந்து முடிக்க முள்ளக்காட்டில் குழாய் பதிக்கும் பணிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித் தார். முள்ளக்காடு கிராமத்தி னர் சார்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விசாரணையை ஆக. 13-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment