பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி எச்சரிக்கை
பாட்னா, ஆக. 2- மத்திய அமைச் சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சியின் பொதுச்செய லாளர் அப்துல் காலித், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதா வது:
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து பல் வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. பீகாரில் மட்டும் ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 280 பேர் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் மோச மான சூழலை எட்டியுள்ள நிலையில் அக்டோபர் நவம் பர் மாதங்களில் இன்னும் உச்சத்தில் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்ற னர்.
தற்போது பீகார் மாநில அரசு முழுமையாக கரோ னாவிலிருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கையில் கவ னத்தைச் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தி னால் கவனம் முழுமையும் தேர்தலை நோக்கி திரும்பக் கூடும்.
இப்போதுள்ள நிலையில், கரோனாவிலிருந்து மக்க ளைக் காப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆத லால், அக்டோபர் நவம்பர் மாதங்களில் சட்டப்பேர வைத் தேர்தல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
தேர்தலை நடத்தினால் அது மக்கள் உயிருக்கு ஆபத் தாக அமைந்துவிடும் என்ப தால் தேர்தலை நடத்துவது முறையாகாது. கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் தேர்தல் நடத் தினால் வேண்டுமென்றே மக்களை சாவில் தள்ளுவது போன்றதாகும்.
பீகார் மாநிலத்தில் ஏற் பட்ட பருவமழை வெள்ளத் தால் ஏற்கெனவே பெரும் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உலக சுகாதார நிறுவ னம், அய்சிஎம்ஆர் வகுத்தச் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது கடினம்.
8 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் சமூக விலகலை பின்பற்றி பங்கேற்பது என் பது சாத்தியமில்லாத ஒன்று.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரம் என்பது நீண்ட நடைமுறை, பல மாதங் களாகத் தயாராக வேண்டும், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், அனைத்து மாநிலக் கட்சி களும் தற்போது கரோனா விழிப்புணர்விலும், பாதுகாப் பிலும் இருக்கின்றன. இந்த நேரத்தில் தேர்தல் பிரச்சாரத் துக்காக மக்களைக் கூட்ட மாகச் சந்திப்பதும், கூட்டம் நடத்துவதும் ஆபத்தானது.
காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து சிலர் பேசுகிறார்கள். ஆனால் ஏழை மக்களைத் தவிர்த்து விட்டு எவ்வாறு பிரச்சாரம் செய்வது, அவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை, தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது எவ்வாறு காணொலி பிரச்சாரம் சாத்தியம்.
ஆதலால், மாநிலத்தில் கரோனா சூழல் முன்னேற்றம் அடையும் போது தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். தற்போ தைய சூழலில் பீகார் மக்கள் தொகையில் மிகப்பெரிய அளவு மக்களை ஆபத்திலி ருந்து காக்க தேர்தலை நடத் தாமல் ஒத்திவைப்பது அவசி யம் என்று எல்ஜேபி நம்புகி றது.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment