டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- ஜி.எஸ்.டி. வரிப் பணத்தில் மாநில அரசுகளுக்குரிய பங்கினை மத்திய அரசு தர மறுப்பதும் அதற்கு கடவுள் செயல் காரணமாக வரி வசூலிப்பு குறைந்துவிட்டது என்று காரணம் சொல்வதும் ஏற்புடையதல்ல. இதே காரணத்தை மக்களும் சொல்ல வாய்ப்பு உண்டு என்று தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
- நீட், ஜே.இ.இ. தேர்வு ஒத்திவைக்கக் கோரி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- நாடாளுமன்றம், சட்ட மன்றம் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்திற்கும் ஒரே வாக்காளர் பட்டியலை கொண்டு வருவது குறித்து பிரதமர் அலுவலகம், தேர்தல் ஆணைய அதிகாரிகளோடு ஆலோசித்து வருகிறது. முன்னர் ஒரே தேர்தல் என்ற முழக்கத்தையும் மோடி அரசு முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்டியலினப் பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து சட்டம் இயற்றிட மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்து:
- மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கை செலவு காரணமாக கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் சூழலில், மோடி அரசு, ஜி.எஸ்.டி. நிதியை உறுதியளித்தவாறு பிரித்துக் கொடுக்க மறுப்பது, மாநில கூட்டாட்சிக்கு முரண்பாடான செயல் என பஞ்சாப் மா நில நிதியமைச்சர் மான்பிரித் சிங் பாதல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆய்வுத்துறைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் கவுடா இணைந்து எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
- கரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது கடவுளின் செயல் என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி அரசு நிர்வாகத்தைத் தவறாக நடத்தியது தான் காரணம் என கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு, குறைபாடு கொண்ட ஜிஎஸ்டி, ஊரடங்கின் தோல்வி இவையே பொருளா தார வீழ்ச்சிக்குக் காரணம். மற்ற அனைத்துக் காரணங்களும் பொய்யே என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
29.8.2020
No comments:
Post a Comment