தேசிய மீன்வள மசோதாவைத் திரும்பப் பெறுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 2, 2020

தேசிய மீன்வள மசோதாவைத் திரும்பப் பெறுக!

மீனவர்கள் வேலைநிறுத்தம்


தஞ்சாவூர், ஆக. 2-- தேசிய மீன்வளக் கொள்கை வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மல்லிப் பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத் திரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாத புரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோ சனைக் கூட்டம் மல்லிப்பட்டி னம் வடக்கு சங்க அலுவலகத் தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு தமிழ் நாடு மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் ஏ.தாஜூ தீன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சின்ன அடைக்கலம், பாலமுரு கன், இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் கோபி, ராஜா, தஞ்சாவூர் மாவட்டம் ராஜ மாணிக்கம், வடுகநாதன், இப்ராஹிம் ஆகி யோர் முன் னிலை வகித்தனர். ஏராள மான மீனவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடித்து கலந்து கொண்டனர்.


மேலும், இதில் அனைத்து மீனவர் கூட்டமைப்புத் தலை வர் ராமேஸ்வரம் என்.ஜெ. போஸ், செயலாளர் ஜேசு ராஜா, பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க தலைவர், மண்ட பம் சங்கத் தலைவர் ஜாஹிர் உசேன், செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கருத்துரையாற்றினர். இக் கூட்டத்தில், “அண்டை மாநி லங்களில் வழங்குவது போல, மீனவர்களுக்கு மானிய விலை யில் டீசல் வழங்கி, மானி யத்தொகையை பில்லிலேயே கழித்துத் தரும் முறையை தொடர வேண்டும். மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையைக் கைவிட வேண்டும். இத்திட்டம் ஆக.1 (சனிக்கிழமை) முதல் அம லுக்கு வரும் என்ற அரசின் முடிவைக் கண்டித்து தஞ்சை, புதுக்கோட்டை, இராம நாத புரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல், வேலை நிறுத்தம் செய்வது, மீனவர்கள் வீடு களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடு வது எனவும், தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒருங்கி ணைத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.


மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், உரி மைகளையும் பாதிக்கும் தேசிய மீன்வள கொள்கை-2020 வரைவு மசோதாவையும், மீன வர்களின் பாரம்பரியத் தொழில் முறையையும், உரிமைகளை யும் பறித்திட வழி வகை செய் யும் தேசிய கடல் மீன் வள ஒழுங்கு முறை கொள்கை வரைவு - 2020 ஆகியவற்றை கைவிட வேண்டும். டீசல் மீதான வரிவிதிப்பை ரத்து செய்து, எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அந்நியச் செலாவ ணியை அதிகளவில் ஈட்டித் தரும் மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும்” என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


 


No comments:

Post a Comment