உழைப்பால் உயர்ந்து அனைவரிடமும் நன் மதிப்பைப் பெற்றவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய செயல்பாட்டாளராகவும், அக் கட்சியின் வர்த்தகர் பிரிவு தொடங்கி இன்று மாநில செயல் தலைவர் என்னும் பொறுப்பு வரை உயர்ந்தவருமான நண்பர் ஹெச்.வசந்தகுமார் அவர்கள் உடல்நலமின்றி மறைவுற்றார் என்னும் செய்தி பெரிதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சிறப்பாகப் பணியாற்றியவராவார். நமது அருமை நண்பர் குமரி அனந்தன் அவர்களின் சகோதரர் என்ற வகையிலும் நமக்கு நெருக்கமானவர். எளிய மக்களுக்கும் பயன்பட்ட தமிழகம் அறிந்த ‘வசந்த் & கோ’ நிறுவனத்தைத் தன் உழைப்பால் விரிவாக்கி வளர்த்த தமிழர் என்ற சிறப்புக்குரியவர்.
அவரது மறைவால் பேரிழப்புக்கு ஆளாகியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக நண்பர் குமரி அனந்தன் அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும், அவரது பரந்துவிரிந்த தொழில் நிறுவனத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.8.2020
No comments:
Post a Comment