ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

  • அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜைக்கு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் இணையம் வழியே காண ராமஜன்ம பூமி டிரஸ்ட் அனுமதி வழங்கியுள்ளதை தலையங்கத்தில் குறிப்பிட்டு, இரு தலைவர்கள் மூக்குடைப் பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • புதிய கல்விக் கொள்கை வார்த்தை ஜாலங்களைக் கொண்டுள்ளது. மனித வளத்தையும், அறிவை விசாலமாக்கவும் எந்த திட்டமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் எந்த கருத்தையும் பெறவில்லை. கல்வியை தனியார்மயமாக்கும் போக்கு அதிகம் உள்ளது, இது நடுத்தர மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

  • புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு ஏற்காது என அம்மாநில முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


 தி இந்து:



  • உத்தர்காண்ட் மாநில கோயில் நிர்வாகம் குறித்து சுப்ரமண்யன் சாமி தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்துத்துவா சக்திகளுக்கு பெரும் பின்னடைவு; கோயிலை நிர்வகிக்கும் அரசுக்கு வெற்றி என அய்தராபாத் சட்டக் பல் கலைக்கழக துணைவேந்தர் பைசன் முஸ்தபா தனது கட்டு ரையில் தெரிவித்துள்ளார்.


இந்துஸ்தான் டைம்ஸ்:



  • குடியுரிமை திருத்த மசோதாவில் உரிய விதிகளை உருவாக்கிட மேலும் மூன்று மாதம் தேவை என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், துணைச் சட்டத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.


தினகரன், சென்னை:



  • புதிய கல்விக் கொள்கை குறித்து மவுனம் சாதித்து, மாணவர்களின் எதிர்காலத்திற்கு துரோகம் செய்து விடக்கூடாது என அ.தி.மு.க. அரசிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


- குடந்தை கருணா


3.8.2020


No comments:

Post a Comment