“இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோருவார்கள்”: சிவசேனா தாக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

“இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோருவார்கள்”: சிவசேனா தாக்கு

மும்பை, ஆக. 3- மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பற்ற நிலை குறித்து கடுமையான கவலையில் ஆழ்ந்திருக்கிறார் கள். இதே நிலை தொடர்ந் தால் மக்கள் வீதியில் இறங்கி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோருவார்கள் என பாஜக அரசுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.


சிவசேனாவின் சஞ்சய் ராவத், அக்கட்சியின் அதிகா ரப்பூர்வ நாளேடான சாம் னாவில் கட்டுரை எழுதியுள் ளார். அதில், அவர் குறிப்பிட் டுள்ளதாவது.


“கரோனாவால் அறிவிக் கப்பட்டுள்ள ஊரடங்கால் மாதச்சம்பளம் பெரும் ஏரா ளமான மக்கள் வேலையிழந்து அவதியுற்றிருக்கிறார் கள். தொழில் துறை, வர்த் தகத்துறை முடங்கியதால் ரூ.4 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.


இப்படியாக இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் ரஃபேல் விமானம் மூலம் குண்டுகள் வீசுவதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட் டுள்ள சிக்கலையும் பிரச்னை களையும் தீர்த்துவிட முடி யாது. பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது?


மத்திய அரசு அளிக்கும் வாக்குறுதிகளாலும், நம்பிக் கைகளால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு விடாது. ஏனெனில் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாது காப்பற்ற நிலை குறித்து கடு மையான கவலையில் ஆழ்ந்தி ருக்கிறார்கள்.


“இதே நிலை தொடர்ந் தால் மக்கள் வீதியில் இறங்கி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோருவார்கள்” -சிவ சேனா தாக்கு


அவர்களின் பொறுமைக் கும் ஒரு எல்லை இருக்கிறது. கரோனாவால் உருவாகியுள்ள வேலையின்மையை அரசு தீர்க்காவிட்டால் பிரதமருக்கு எதிராக மக்கள் போராடும் சூழல் உண்டாகும்.


கரோனா பரவலை சரி வரை கையாளாமல் பொரு ளாதார சிக்கலையும் இழுத்து விட்ட இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியது போன்று இந் தியாவிலும் நிகழலாம். பிரத மர் மோடி பதவியை ராஜி னாமா செய்யக் கோரி மக்கள் முறையிடும் காலமும் கணிய லாம்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.


No comments:

Post a Comment