திருவாரூர், ஆக. 3- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண் டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:
“தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு தொடர்வதால் விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், வணிகர்கள் சிறு, குறு தொழில் செய்வோர் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான நேரடி உதவிகள் செய்ய வேண்டுமென்று அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள் ளது. ஆனால் பொதுப் போக் குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளர்கள் எவ்வாறு வேலைக்குச் செல்ல முடியும்? இதற்கு அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
கரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு பல அவசர சட் டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது. நாட்டு மக்களுக்கு, விவசாயிகளுக்கு எதிராக, மின்சார திருத்தச் சட்டம், சுற்றுச்சூழலுக்கு எதி ரான சட்டங்களையும் மத் திய அரசு கொண்டுவருகிறது. பெரு நிறுவனங்களுக்கு ஆத ரவாகவும் செயல்படுகிறது. மின்சார திருத்தச் சட்டத் தால் தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படு வார்கள். அவர்கள் உரிமை கள் பறிக்கப்படும், மாநில உரி மையும் பறிக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கஸ்தூரி ரங் கன் குழு பரிந்துரையை அப் படியே ஏற்றுக்கொண்டது. இதற்கு எதிராக வந்த இரண்டு லட்சம் மனுக்களை பரிசீ லனை செய்யாமல், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் அவரசமாக அமைச்சரவை கூடி முடிவு செய்திருப்பது மிக கடுமை யான கண்டனத்துக்குரியது.
அது புதிய கல்விக் கொள் கையல்ல. அது பழைய கல்வி கொள்கை. ராஜாஜி இருந்த போது குலக்கல்வியை கொண்டு வந்தார். நாடே கொந்தளித்த பிறகு ராஜாஜி தனது பத வியை ராஜினாமா செய்தார். குலக்கல்வி என்பதற்கு பதி லாக தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை நுழைப் பதற்கும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிப் பதற்கும் மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிகளின் கட்டுப் பாட்டில் கொண்டு சென்றது ஏற்புடையது அல்ல. இவை எல்லாம் மாநில அரசின் உரி மைகளைப் பறிக்கும். அறிவிக் கப்படாத அவசரநிலை பிர கடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப் புகள் தேர்வு செய்யப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. அவர் கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. உள்ளாட்சி நிதிகள் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமா கவே செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள் பொம் மைகளாகவே உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோ தமானது. மத்திய, மாநில அரசுகள் கரோனா காலத்தை தங்களுக்கு சாதமாக பயன் படுத்தி ஏராளமான அறிவிப் புகளையும் அவசர சட்டங்க ளையும் நிறைவேற்றிக் கொண் டிருக்கிறார்கள். இதை மக் கள் ஒருபோதும் ஏற்கமாட் டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லம் குறித்தும் , மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்தும் அவ தூறான செய்தி வெளியிட் டது குறித்து சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட் டத்தை நடத்தும்.” இவ்வாறு முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment