ஒசூர் 9ஆவது புத்தகத் திருவிழாவில் பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

ஒசூர் 9ஆவது புத்தகத் திருவிழாவில் பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு


ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர். ஒசூரில் புத்தக திருவிழா குழுவினர் திட்டமிட்டு பொதுமக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்ற முடிவோடு மாநகர நிர்வாகம்,காவல் துறை, வருவாய் துறை, ஒசூர் நிழல் அறக்கட்டளை, ஒசூர் காவேரி மருத்துவமனை ஆகியோர் ஒத்துழைப்போடு 9ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா மிகவும் பாதுகாப்புடன் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்பெற்றது. புத்தகத் திருவிழா வுக்கு வருகைபுரிந்தோருக்கு மருத்துவச் சோதனை செய்யப்பட்டது. முகக்கவ சம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கியபின்னரே அனுமதிக்கப்பட்டனர். புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன. தந்தை பெரியார் இன்றும் என்றும் தேவைப்படுகிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் பெரியார் புத்தகங் கள் அனைத்தும் இரண்டு நாட்களில் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment