புதுடில்லி, ஆக.1- கரோனா வைரஸ் அச்சுறுத்தல் கார ணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக் கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர் வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழி காட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பல்வேறு பல் கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மாண வர்கள், தங்கள் மனுவில், யு.ஜி.சி வழிகாட்டுதல்களை தன்னிச்சையாக இருப்பதா கவும் கரோனா தொற்று நோய்க்கு மத்தியில் தேர்வுக ளுக்கு வருமாறு மாணவர் களை கட்டாயப்படுத்துவதா கவும் கூறி உள்ளனர். கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment