தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமா ரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும், தொண் டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கின தாலும், மறைக் கதவைத் திறந்ததாலும், தமிழ் மேன்மை யுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையும் குறைக்கத்தான் பயன் படும். பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவ மல்லவா? அன்றியும் அந்தப் படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 19.01.1936
‘மணியோசை’
No comments:
Post a Comment