ஒசூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கி.வெங்கடசாமி 27.8.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் குடும்பத்தி னருக்கு மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் மற்றும் பொறுப்பாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
- - - - -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கடலங்குடி பெரியார் பெருந்தொண்டர் மு.வாசுதேவன் (வயது 94) நேற்று மாலை 3 மணியளவில் மறைவுற்றார். இவர் அய்யா பெரியார் காலம் முதல் கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். 90 வயதுக்கு மேல் உள்ள பெரியார் பெருந்தொண்டர் களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழர் தலைவரால் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு 3 மகன்கள், மகள்கள் உள்ளனர். செய்தியறிந்த மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், எரவாஞ்சேரி அரங்க.ராசா மற்றும் கழக தோழர் கள் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment