12ஆம் வகுப்பு மறுதேர்வு: 519 பேரில் 180  பேர் மட்டுமே தேர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

12ஆம் வகுப்பு மறுதேர்வு: 519 பேரில் 180  பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை, ஆக. 1- 12ஆ-ம் வகுப்பு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளி யன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஊர டங்கு காரணமாக தமிழகத் தில் கடந்த மார்ச் 24ஆ-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடி யாத நிலை ஏற்பட்டது.


இதையடுத்துத் தேர்வெழு தாத மாணவர்களுக்கு கடந்த 27-ஆம் தேதி மறுதேர்வு நடை பெற்றது. மாநிலம் முழுவதும் 290 மய்யங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். பள்ளி மாண வர்கள் 147 பேர் மற்றும் நேர டித் தனித்தேர்வர்கள் 372 பேர் என மொத்தம் 519 பேர் இந்தத் தேர்வில் கலந்து கொண் டனர்.


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் திங்களன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டன. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாண வர்களில் 180 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். 92 பள்ளி மாண வர்கள் மற்றும் 88 நேரடித் தனித்தேர்வர்கள் என மொத் தம் 180 பேர் தேர்ச்சி அடைந் துள்ளனர்.


No comments:

Post a Comment