மதுராந்தகம்,ஆக.29, மதுராந்தகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந் தகம் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 6 பேரில் 4 பேரை பொய்யான காரணம் கூறிய ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்து, 2 பேரை வேறு மாவட்டத்துக்கு மாற்றியது கண்டிக்கத் தக்கது.
தற்போது கரோனா பணியையொட்டி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தமிழக அரசு தினமும் வழங்கும் ரூ.150அய் ஒப்பந்த நிறுவனம் சரியான நேரத்தில் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறது என முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment