சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டது இன்னும் எத்தனை நாட்களுக்கு அரசின் தூக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 2, 2020

சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டது இன்னும் எத்தனை நாட்களுக்கு அரசின் தூக்கம்

சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டது இன்னும் எத்தனை நாட்களுக்கு அரசின் தூக்கம்?


உ.பி.பாஜக அரசுமீது பிரியங்கா காந்தி சாடல்



புதுடில்லி, ஆக. 2- உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரி யங்கா காந்தி டுவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:


உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சரிந்து விட்டது.  குற்றமும், கரோனாவும், எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. வழக்குரைஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர் கடத்தப் பட்டு 8 நாட்கள் ஆன நிலை யில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. கான்பூர், கோரக்பூர், புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம்-ஒழுங்கு மந்தமாக செயல்படுகிறது. எத்தனை நாட்களுக்குத் தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப் போகிறது? என பதிவிட்டுள்ளார்.


கரோனா தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா அளிக்க முன்வரவேண்டும்


ரூ.5000 ஊக்கத்தொகை அளிக்கப்படுமாம்!


அய்தராபாத், ஆக. 2- இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்சூழலில், கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப் பதற்காக தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா கொடையாக அளிக்க மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா அளிக்க முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரு கிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. 63,864 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 1,349 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மய்யம் தகவல்


சென்னை, ஆக. 2- வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்பட வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் மழை பெய்யும் என்று வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.


இதுவரை 1 கோடியே 93 லட்சத்து 58ஆயிரத்து


659 கரோனா மாதிரிகள் பரிசோதனை: அய்சிஎம்ஆர்



புதுடில்லி, ஆக. 2- நாடு முழுவதும் ஒரே நாளில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 689 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 659 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது என்று அய்சிஎம்ஆர் தகவல் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment