மீஞ்சூர் பகுதியில் தந்தை பெரியார் சிலை காவிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது
திருவள்ளூர்,ஜூலை 31, திருவள்ளூர் அருகே மீஞ்சூரில் திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை நேற்று விஷமிகள் சேதப்படுத்தி, அவமதித்துள்ளனர். இது குறித்து திமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்ட தற்கு கடுங்கண்டனம் தெரிவித்து திருவள்ளூர், வடலூர், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டன அறப்போராட்டங்கள் நடைபெற்றன.
மீஞ்சூர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர் (31.7.2020)
No comments:
Post a Comment