டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- பொது நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும், தெலங்கானா அரசு ரத்து செய்துவிட்டது. கல்லூரித் தேர்வுகள் ரத்து பற்றிய முடி வைத் தெரிவிக்கும்படி, அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- சீன நாட்டின் செயலியை இந்தியாவில் தடை செய்வது மட்டுமே, நமது இராணுவ வீரர்களின் உயிர் இழப்புக்கு ஈடாக அமையாது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் துன்புறுத்தப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மாஜிஸ்டிரேட் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட காவலர் கள் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் இருவரும் விடிய விடிய காவலர்களால் அடித்துத் துன்புறத்தப்பட்டார்கள் என அங்கு பணி புரியும் பெண் காவலர் ரேவதி, கோவில்பட்டி மாஜிஸ்டி ரேட் பாரதிதாசனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு சான் றிதழ் தருவது குறித்து, அமைச்சர்கள் குழு விரைவில் முடிவெடுக்கும் என தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 86000-த்தையும் தாண்டி விட்டது. டில்லியை விட கூடுதலாகி, இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்திற்கு அடுத்ததாக தமிழ் நாடு அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ள மாநிலமாக ஆகியுள்ளது.
எகனாமிக் டைம்ஸ், மும்பை:
- இந்திய மனித வள மேம்பாட்டிற்கு அடுத்த அய்ந்து ஆண்டு களுக்கு ரூ. 4 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை மனித வள அமைச்சகம் கோரியுள்ளது. சீன நாட்டின் மனித வளர்ச்சியை விட இந்தியா மிகக் குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- அனைத்து மாநிலங்களிலும் வரும் நவம்பர் மாதம் வரை பொது விநியோகக் கடைகளில் மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் (அரிசி, கோதுமை) மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், மேற்கு வங்கத்தில் தனது அரசு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக தானியங்களை வழங்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
- காவல் நிலைய விசாரணையில் ஏற்படும் மரணங்கள் குறித்து 1997இல் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம், காவல் துறை முறை கேட்டைத் தடுப்பதற்கென்று வகுத்தளித்த விதிகளை முறையா கக் கடைப்பிடித்தால், இது போன்ற குற்றங்கள் நிகழாது என இது போன்ற வழக்குகளில் ஆஜராகி வாதாடியவரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிசேக் சிங்வி கட்டுரையில் விவரித்துள்ளார்.
- குடந்தை கருணா,
1.7.2020
No comments:
Post a Comment