தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் பிறந்து, சுமார் 90 ஆண்டுகளுக்குமுன்பே ஒடுக்கப் பட்டோரின் உரிமைக் குரலாய் முழங்கிப் போராடி, லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் புரட்சியாளர் அம்பேத்கருடன் கலந்து கொண்ட சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனாரின் 161 ஆவது பிறந்த நாள் (7.7.2020) இன்று!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி ஆட்சியில் (SILF) பனகால் அரசர் மாநிலப் பிரிமியராக இருந்தபோது இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் முயற்சியால் - தாழ்த்தப்பட்டோர் பொது வீதியில் நடக்கும் உரிமை, பொதுக்கிணறு,பொதுக் குளங்களில் புழங்கும் உரிமைகளை வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது (20.8.1924). அதனை எதிர்ப்பது தண்டனைக்குரியது என்ற ஆணை வெளிவருவதற்குக் காரணமாக இருந்த வர்தான் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஆவார்.
அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமை களை வென்றெடுக்க, மனித உரிமைப் போராட்டத்தில் முன் னின்று ‘பறையன்' என்ற பெயரில் ஏடு நடத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்திய வித்தகர்.
பண்டித அயோத்திதாசரின் மைத்துனர் ஆவார்.
அத்தகைய பெரியோர்களின் உழைப்பில் தான் இன்று நாட்டில் சமூகநீதி மேடை பலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் அமைப்போம்!
ஓங்குக அவர் புகழ்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.7.2020
No comments:
Post a Comment