காரைக்காலில் கரோனா பரிசோதனை மய்யம்: நாராயணசாமி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

காரைக்காலில் கரோனா பரிசோதனை மய்யம்: நாராயணசாமி தகவல்

காரைக்கால்,ஜூலை3- காரைக்கால் மாவட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயண சாமி நேற்று காலை சென்ற னர். அங்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதி காரிகள் கலந்துகொண்டனர்.


கூட்டத்தின் முடிவில், முதல்-அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-


இந்தியாவில் கரோனா தொற்று பரவத்தொடங்கிய உடனே, புதுச்சேரி மாநிலத் தில் எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 5 முறை ஊரடங்கு அறிவித்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


காரைக்காலை பொறுத்த வரை, நீண்ட நாட்களாக பச்சை மண்டலமாக இருந்து வந்தது. முதலில் சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும், பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் கள் குணமடைந்த நிலையில், மீண்டும் சென்னையிலிருந்து வந்தவர்களால் தொற்று பரவ ஆரம்பித்தது. தற்போது 42 பேர் கரோனா தொற்று பாதித்து, அதில், 27 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவு மற்றும் சிகிச்சை வழங்க உத் தரவிட்டுள்ளேன்.


கரோனா பரிசோதனை களை திருவாரூருக்கு அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகே முடி வுகளை பெற வேண்டியது இருப்பதால் காரைக்காலி லேயே கரோனா பரிசோதனை மய்யம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் அதை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment