டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- இந்திய - சீன எல்லையில், இரு நாட்டு ராணுவமும் திரும்பப் பெறுவதாகவும், இதில் பாங்காங்சோ பகுதியில் பிங்கர் 3 வரை இந்திய ராணுவம் பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. ஏற்கெனவே இப்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடும் சூழலில், இது இந்தியா விற்குப் பின்னடைவு.
- கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, பொருளாதார வீழ்ச்சி, சுகாதாரத்துறை சரிவர கையாளாதது, புலம் பெயர்ந்த தொழி லாளர்களைப் புறக்கணித்தது என அனைத்தும் அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது மாணவர்களின் படிப்புச் சுமையைக் குறைக்கிறோம் என்ற பெயரில், தங்களது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நிறைவேற்றும்வகையில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை போன்ற பாடங்களை நீக்கியுள்ளது. இது மட்டுமல்லா மல், இயற்பியல் பாடத்தில், நியூட்டன் தத்துவ விதி போன்றவை நீக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என தலையங்க செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில், இந்தியா தனது எல்லையின் பகுதிகளை இழந்துள்ளது என சாய்காட் தத்தா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- சாத்தான்குளம் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.அய்.டி. அதிகாரிகளே தொடர்ந்து நடத்திட வேண்டும் என மனித உரிமைக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- கரோனா தொற்று அதிகரித்துவருவதால், கல்லூரி இறுதி யாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு, பல்கலைக்கழக மானியக்குழுவின் மேனாள் தலைவர் சுகதியோ தோராட் உள்ளிட்ட 27 கல்வியாளர்கள் யு.ஜி.சி.க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- ஏற்கெனவே பண மோசடி குறித்து சர்ச்சையில் இருக்கும் அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், தற்போது தீவான் வீட்டு நிதி எனும் தனியார் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியதில்,
ரூ. 3688 கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- உ.பி.யில் எட்டு காவலர்களைச் சுட்டுக் கொன்ற விகாஸ் துபேயின் கைது திட்டமிட்ட சரண் நாடகம் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
- பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு இடஒதுக்கீடு தருவதை தங்கள் அரசு எதிர்ப்பதாக தமிழ் நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி இந்து:
- மருத்துவப் படிப்பில் +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ் நாடு முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
- அருணாச்சலப் பிரதேசம் வரையிலான எல்லையில் சீனா மேற்கொண்ட “ஊடுருவல்கள், அத்துமீறல்கள்” குறித்து உடனடியாக ஓர் உண்மை கண்டறியும் அமைப்பை ஏற்படுத்திட வலியுறுத்தி, மேனாள் ராணுவத் தளபதி அட்மிரல் ராம்தாஸ் உள்ளிட்ட 144 வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் வற்புறுத்தியுள்ளனர்.
- குடந்தை கருணா
10.7.2020
No comments:
Post a Comment