கரோனா தொற்று மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

கரோனா தொற்று மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்

விஞ்ஞானிகள் எச்சரிக்கை


லண்டன், ஜூலை 10  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாசப்பிரச்சினை அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிர மாக நடந்து வரும் நிலையில், கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழு வதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய் வில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றி லிருந்து விடுபட்டவர் களுக்கு மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கை யில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கரோனாவின் முதல் அறி குறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக் கப்பட் டுள்ளது.


40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு பாதிப்பு இருந்ததும், மேலும்


8 பேருக்குப் பக்கவாதத்தை ஏற்படுத் தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வ றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவ தாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச் சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


ஆரம்பகால நோயறிதல்களுக்கு உதவுவதற்கும் நோயாளி யின் குணப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் நரம்பியல் விளை வுகளின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோயுடன் தொடர்புடைய கடுமையான சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகளை காட்டாவிட்டால் கூட, அவர்களுக்குப் பக்கவாதம், நரம்பு பாதிப்பு மற்றும் ஆபத்தான மூளை வீக்கம் உள்ளிட்ட நரம் பியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் எச் சரித்துள்ளனர்.


No comments:

Post a Comment