டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுடன் பேசியதாக பா.ஜ.க. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகவாட் விளக்கம் கேட்டு அம் மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்கான ஆலோசனை வழங்கிட பிரதமர் மோடி கூட்டியுள்ள 90 நிமிட கூட்டத்திற்கு 50 அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொருவரும் இரண்டு நிமிடத்தில் ஆலோசனை தந்து, எத்தகைய ஆக்கப்பூர் வமான கருத்தினைத் தர முடியும் என மூத்த பத்திரிகையாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- இந்தியா எப்போதும் சந்தித்திராத சவால்களாக, கரோனா தொற்று, இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி, இவைகளை ஓரம்கட்டிவிட்டு, அயோத்தியில் கோயில் கட்டும் திட்டத்தை மோடி அரசு முன்னெடுப்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சாடியிருப்பது சரியே என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மோடி அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதி மன்றம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் விளக்கம் கேட்டுள்ளது.
- மத்திய அரசு கொண்டு வந்த மின்சார ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக் கத்தை அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங் கரன் துவக்கி வைத்தார்.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட மக்களிடம் நோய் தடுப்பை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தி இந்து, டில்லிப் பதிப்பு
- பத்மனாபசாமி கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கோயில்களின் நிர்வாகம் குறித்த ஒரு கருத்தியலை பரிந்துரைக் கிறது என கேரள அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயகுமார் கட்டுரையில் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- பிரதமர் மோடி தன்னை பலவான் என்ற பிம்பத்தைக் காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சியே இந்தியாவின் பலவீனம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு டில்லி செல்வோர்க்கு, விமானப் பயணம், தங்கும் விடுதி, உணவு செலவுகள் அனைத்தையும், யு.பி.எஸ்.சி. ஆணையம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயில் உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் பல விளைவுகளையும் ஏற்படுத்தும் என பானு பிரதாப் மேத்தா தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
- மத்திய அரசின் விவசாயக் கொள்முதல் சட்டம் மாநிலங் களைக் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்பட வேண் டும்; இல்லாவிடில் எதிர்வினை ஆற்றும் என ஆராய்ச்சியாளர் கிறிஸ்டப் ஜாப்ரலட், ஹேமல் தாக்கர் ஆகியோர் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.
- அமெரிக்காவில் நிலவி வரும் நிறவெறிக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம், ஒட்டு மொத்தமாக பணி யில் இருந்து விலகுதல் போன்ற முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லிப் பதிப்பு
- பிற்படுத்தப்பட்டோர்க்கான கிரிமிலேயர் வருமான வரம்பில் சம்பள வருமானத்தைச் சேர்த்திடும் மோடி அரசின் ஆலோசனைக்குப் பிற்படுத்தப்பட்டோர்க்கான நாடாளுமன்றக் குழு தலைவர் கணேஷ் சிங், எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் உள்ள 113 ஓபிசி உறுப்பினர்களும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்க்கு இது குறித்து எதிர்ப்பைப் பதிவிடும்படி, கடிதம் எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
21.7.2020
No comments:
Post a Comment