ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • குழந்தைகள் இணைய வழிக்கல்வி எனும் பெயரில் தொடர்ந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கவனித்து வந்தால், கண் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையோடு தேர்தலைச் சந்தித் தால் தான், ஆளும் நிதிஷ்குமார் - பா.ஜ.க. கூட்டணியை எதிர் கொள்ள முடியும் என பேராசிரியர் சஞ்சய் குமார் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடியின் அண்மைப் பேச்சில், நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவச தானியங்கள் அரசு வழங்கும் என்ற அறிவிப்பை மட்டுமே வெளியிட்டார். ஆனால், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் முயற்சி பற்றியோ, சரிந்துவரும் பொருளாதாரத்தைச் சரி செய்ய எடுப்பது பற்றியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து விசாரித்துவரும் சி.பி.சி.அய்.டி. ஆறு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. உதவி ஆய் வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க, தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு. மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறி விப்பு. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை லக்னோ - டில்லி மார்க் கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவையை அய்.ஆர்.சி.டி.சி. நடத்துகிறது. துணை நிறுவனத்துக்கு ரயில் சேவை விடப்பட்டது இதுவே முதல் முறை.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பழங்கள், பூக்கள், தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை; முகக் கவசம் கட்டாயம் போன்ற நிபந்தனைகளுடன், கிரா மங்களில் சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


தி இந்து:



  • அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஜாதி ரீதியாக ஊழியர் ஒருவர் மீது பாகுபாடு காட்டி, துன்புறுத்தியதாக மேலாளர்கள் சுந்தர் அய்யர், ரமணா கொம் பெல்லா ஆகிய இருவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.


- குடந்தை கருணா,


2.7.2020


No comments:

Post a Comment