ஜெய்ப்பூர், ஜூலை 30- காங் கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் இராஜஸ்தானில் முதல் அமைச்சர் அசோக் கெலாட் டுக்கும், துணை முதல்அமைச் சராக இருந்த சச்சின் பைலட் டுக்கும் இடையே ஏற்பட் டுள்ள மோதலால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப் பம் ஏற்பட்டு உள்ளது. சட்ட சபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில், சச்சின் பைலட் டும் அவரது ஆதரவு எம்.எல். ஏ.க்கள் 18 பேரும் கொறடா உத்தரவைமீறும் வகையில் கலந்து கொள்ளாமல் புறக் கணித்தனர். இதனால் அவர்க ளுக்கு சபாநாயகர் சி.பி. ஜோஷி தகுதி நீக்கத்துக்கான தாக்கீதை அனுப்பினார். இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் தொடரப் பட்ட வழக்கை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன் றம், சச்சின் பைலட் உள் ளிட்ட 19 பேர் மீதும் சபாநா யகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே, சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க விரும்பும் முதல் அமைச்சர் அசோக் கெலாட், ஆளுநரை சந்தித்து, சட்ட சபையை கூட்டுமாறு கேட் டுக் கொண்டார். முதல் முறை அனுப்பிய கோரிக் கையை ஆளுநர் நிராகரித்த தைத் தொடர்ந்து சட்ட சபையை கூட்டுமாறு 2ஆவது முறையாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பப் பட்டது.
இதனைத்தொடர்ந்து, சட்டசபையைக் கூட்டத் தயார் என்று ஆளுநர் கல் ராஜ் மிஸ்ரா, திருத்தப்பட்ட அந்தக் கோப்பை மீண்டும் அரசுக்குத் திருப்பி அனுப்பி இருந்தார். இதனிடையே நேற்று சட்டசபை சபா நாயகர் சி.பி. ஜோஷி, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்துப் பேசினார். அப்போது தற் போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோ சனை நடத்தினார். முன்ன தாக முதல்அமைச்சர் அசோக் கெலாட் நேற்று 3ஆவது முறையாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அவரது மாளிகை சென்று சந்தித்துப் பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்க வெளியிடப்பட்ட வழிகாட்டு தல்களின்படி, சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என் றும் ஆளுநர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment