திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 91 பேருக்கு கரோனா உறுதியானது
திருப்பதி, ஜூலை 13 முழு ஊரடங்கு திரும்பப் பெற்று ஜூன் 8 ஆம் தேதி முதல் தமிழகம், கேரளாவைத் தவிர மற்ற மாநிலங் களில் கோவில்கள் திறக்கப்பட்டன, கோவில் கள் திறந்த நாளிலிருந்து அங்கு கரோனா தொற்றுப் பரவி வருகிறது,
திருப்பதி கோவிலில் ஏற்கெனவே அர்ச்சகர் உள்ளிட்ட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந் நிலையில் கோவில் நிர்வாகம் அர்ச்சகர்கள், மொட்டை அடிப்பவர்கள் உள்ளிட்ட முக்கிய ஊழியர்கள் அனைவருக்குமே முழு உடல் பாதுகாப்புக் கவசம் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் விடுமுறை ஆனதால் திருப்பதி கோவிலில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதனால் சில ஊழியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்குச் சோதனை செய்ததில் 91 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் நூற்றுக்கணக்கான பரிசோதனை முடிவுகள் திங்கள் (இன்று) வர உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டும் ஒரே நாளில் தொற்று நூற்றுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள் உள்பட அங்கு 100 ஊழியர் களுக்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது
No comments:
Post a Comment